பிரதமர் மோடியின் யோகா மணல் சிற்பம்: பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் அசத்தல்...!

ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த பிரதமர் மோடியின் யோகா மணல் சிற்பம்.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு பா.ஜ கட்சி ஏற்பாடு செய்து இருந்தது..
கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்வை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில் ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏழு அடி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். சிற்பத்தின் கருப்பொருளாக யோகாவின் 12 ஆசனங்களின் வரிசை அந்த சிற்பத்தில் இடம்பெற்றுள்ளது .
இதன் சிறப்பம்சமாக, சிற்பத்தின் மையத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போன்று வடிவமைக்கப்பட்டது. இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலக புகழ் பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், வித்தியாசமான மணல் சிற்பங்களை அடிக்கடி வடிவமைத்து பரபரப்பையும், ஆச்சரியத்தையும் உலக மக்களிடம் ஏற்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu