பிரதமர் மோடி முதல் சுற்றில் பின்னடைவு: பா.ஜ.க. கூட்டணிக்கு அதிர்ச்சி

பிரதமர் மோடி முதல் சுற்றில் பின்னடைவு: பா.ஜ.க. கூட்டணிக்கு அதிர்ச்சி

பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முதல் சுற்றில் பின்னடைவில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்து இருப்பது பாஜக கூட்டணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டு மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் வகித்தனர். அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் திறந்து எண்ணப்பட்டு வருகிறது.

நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று உத்தர பிரதேச மாநிலம். உத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. இதில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என கருத்துக்கணிப்புகள் கூறி வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. அங்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை வைக்கிறார்கள். காங்கிரஸும் முன்னிலை வைக்கிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. இதைவிட கடும் அதிர்ச்சி தகவலாக பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் அவர் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது சுமார் 6000 வாக்குகள் பின்னடைவில் இருந்ததாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தனது வெப்சைட் தளத்தில் பதிவிட்டுள்ளது. இரண்டாவது சுற்று எண்ணப் பட்ட பிறகும் காங்கிரஸ் வேட்பாளர் தான் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி பாரதிய ஜனதா கூட்டணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story