டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
X

 டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன்

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது, துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!