அசாமில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி

அசாமில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி
X

பைல் படம்.

உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் விரைவு ரயில் சேவை அசாமின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு ஏழைகளின் நலனுக்கு அதிக முன்னுரிமை அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியில் உள்கட்டமைப்பு அனைவருக்கும் சமமாக இல்லை எனக் கூறிய அவர், உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக கூறினார். மேலும், முந்தைய ஆட்சியால் வடகிழக்கு மக்கள் நீண்டகாலமாக வளர்ச்சியின்றி இருந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture