''சுற்றிலும் அமைதியும் செழிப்பும் இருக்கட்டும்'' பிரதமர் மோடி மீலாடி நபி வாழ்த்து

இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பதிவில் மீலாடி நபி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் மீலாடி நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளும் இதே நாளில் வருவதால், இஸ்லாமியர்கள் இன்று மீலாடி நபி பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், சுற்றிலும் அமைதியும் செழிப்பும் இருக்கட்டும். கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும் என இஸ்லாமியர்களுக்கு மீலாடி நபி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.



Tags

Next Story
ai healthcare products