/* */

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல்

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

HIGHLIGHTS

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல்
X

பைல் படம்

நாடு முழுவதும் 508 ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளுக்கு நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

அதிநவீன பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது குறித்து பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். நாடு முழுவதும் மக்களுக்கு விருப்பமான போக்குவரத்து முறையாக ரயில்வே உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ரயில் நிலையங்களில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், நாடு முழுவதும் 1309 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 508 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையங்கள் ரூ. 24,470 கோடி செலவில் சீரமைக்கப்படும். இந்த நிலையங்களை நகரின் இருபுறமும் முறையாக ஒருங்கிணைத்து, நகரின் முக்கிய மையப்பகுதியாக மேம்படுத்த பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை ரயில் நிலையத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் அமைந்துள்ளன.

மறுவடிவமைப்பு செயல்முறை பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து நடைமுறையை உறுதி செய்யும். இந்த ரயில் நிலைய கட்டடங்களின் வடிவமைப்பு உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும்.

Updated On: 6 Aug 2023 5:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?