சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான  திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
X

பிரதமர் நரேந்திர மோடி.

சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ. 19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். எண்ணெய், எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், அணுசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இந்தத் திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பகவான் ஜகந்நாதர், மா பிர்ஜா ஆகியோரின் ஆசீர்வாதத்தால், ஜஜ்பூர் மற்றும் ஒடிசாவில் வளர்ச்சியின் புதிய நீரோட்டம் இன்று ஓடத் தொடங்கியதாகக் கூறினார். பிஜு பட்நாயக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் அவரது ஒப்பற்ற பங்களிப்பைப் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அணுசக்தி, சாலைப் போக்குவரத்து, ரயில்வே, போக்குவரத்து ஆகிய துறைகளில் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தப் பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒடிசா மக்களை அவர் பாராட்டினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தீர்மானத்திற்காகப் பணியாற்றும் அதே வேளையில், நாட்டின் தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அரசின் அணுகுமுறையைப் பிரதமர் முன்வைத்தார். எரிசக்தித் துறையில் கிழக்கு மாநிலங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். உர்ஜா கனகாத் திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய ஐந்து பெரிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான பெரிய திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒடிசாவின் பாரதீப் முதல் மேற்கு வங்கத்தின் ஹால்டியா வரை 344 கி.மீ நீளமுள்ள உற்பத்திக் குழாயை பிரதமர் திரு மோடி திறந்து வைத்தார். பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியன் ஆயில் கழக நிறுவனம் மோனோ எத்திலீன் கிளைக்கோல் திட்டத்தையும், பாரதீப்பில் ஆண்டுக்கு 0.6 மில்லியன் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இறக்குமதி வசதியையும் அவர் தொடங்கி வைத்தார். இது பத்ரக், பாரதீப்பில் உள்ள ஜவுளிப் பூங்காவிற்கு மூலப்பொருட்களை வழங்கும் என்று அவர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சி, நாட்டில் மாறிவரும் பணிக் கலாச்சாரத்தின் அடையாளமாகும் என்று சுட்டிக் காட்டிய பிரதமர், வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டாத முந்தைய அரசையும், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை உரிய நேரத்தில் தொடங்கி வைக்கும் தற்போதைய அரசையும் ஒப்பிட்டுப் பார்த்தார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், 2002-ம் ஆண்டு பாரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விவாதப் பொருளாக மாறியது என்றும், ஆனால் 2014-ம் ஆண்டில் தற்போதைய அரசு பதவிக்கு வரும் வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டார். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் நேற்று பாரதீப் – ஹைதராபாத் குழாய் பதிக்கும் திட்டத்தையும், மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியாவிலிருந்து அரும்பாக் பகுதியில் பரவுனி வரை 500 கிலோ மீட்டர் நீளமுள்ள கச்சா எண்ணெய் குழாய் பாதையையும் தொடங்கி வைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

ஒடிசாவின் வளர்ச்சிக்காக கிழக்கு இந்தியாவில் உள்ள ஏராளமான இயற்கை வளங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு மோடி, கஞ்சம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை பற்றி பேசினார். இது நாள்தோறும் சுமார் 50 லட்சம் லிட்டர் உப்பு நீரை சுத்திகரித்து குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றும்.

உள்ளூர் ஆதாரங்களைக் கொண்டு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒடிசாவில் நவீனப் போக்குவரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 3,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ரயில்வே பட்ஜெட் 12 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். ரயில்-நெடுஞ்சாலை - துறைமுக இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஜஜ்பூர், பத்ரக், ஜகத்சிங்பூர், மயூர்பஞ்ச், கோர்தா, கஞ்சம், பூரி, கெந்துஜார் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். புதிய அங்குல் சுகிந்தா ரயில் பாதை கலிங்கா நகர் தொழில்துறை பகுதியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

பிஜு பட்நாயக்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி உரையை நிறைவு செய்த பிரதமர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஒடிசா ஆளுநர் திரு ரகுபர் தாஸ், ஒடிசா முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தின் மோனோ எத்திலீன் கிளைக்கோல் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ஒடிசாவின் பாரதீப் முதல் மேற்கு வங்கத்தின் ஹால்டியா வரை 344 கிலோ மீட்டர் நீளமுள்ள உற்பத்திக் குழாய் பாதையையும் அவர் தொடங்கி வைத்தார். இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இறக்குமதி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பாரதீப்பில் ஆண்டுக்கு 0.6 மில்லியன் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இறக்குமதி வசதியை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்தப் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சிங்காரா முதல் பிஞ்சபஹால் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49-ல் நான்கு வழிப்பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சண்டிகோலில் சண்டிகோலில் – பாரதீப் பிரிவில் எட்டு வழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பன்சபானி – தைதாரி – டோம்கா – ஜகாபுரா – 162 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தற்போதுள்ள போக்குவரத்து வசதியின் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கியோஞ்சர் மாவட்டத்திலிருந்து இரும்பு, மாங்கனீசு தாதுவை அருகிலுள்ள துறைமுகங்கள், எஃகு ஆலைகளுக்கு திறம்பட கொண்டு செல்ல உதவும். இது பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். கலிங்கா நகரில் கான்சர் கொள்கலன் கிடங்கின் திறப்பு விழாவும் உள்நாட்டு, சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. நர்லாவில் மின்சார லோகோ காலமுறை ஓவர்ஹாலிங் பணிமனை, கண்டபஞ்சியில் வேகன் காலமுறை ஓவர்ஹாலிங் பணிமனை, பாகுவாபாலில் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மற்ற ரயில்வே திட்டங்களில் புதிய ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததும் அடங்கும்.

ஐ.ஆர்.இ.எல் (ஐ) நிறுவனத்தின் ஒடிசா மணல் வளாகத்தில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பங்களின் களப் பயன்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் கட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil