உலகிலேயே முதன்முறையாக "பாரம்பரிய மருந்துகளுக்கான மையம்" -குஜராத்தில் அடிக்கல் நாட்டினார் பிரதமர்

உலகிலேயே முதன்முறையாக பாரம்பரிய மருந்துகளுக்கான  மையம் -குஜராத்தில் அடிக்கல் நாட்டினார் பிரதமர்
X
குஜராத், ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உலகிலேயே முதன்முறையாக இத்தகைய மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகியவற்றின் பிரதமர்களும், மாலத்தீவுகளின் அதிபரும் அனுப்பிய வீடியோ செய்திகள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன. மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு சர்பானந்தா சோனாவால், முஞ்ச்பாரா மகேந்திர பாய், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறை சிகிச்சையோடு நிற்பதில்லை, அது வாழ்க்கையின் ஒட்டுமொத்த அறிவியலாகும் என்றார். சிகிச்சை மற்றும் குணப்படுத்துதலுக்கு அப்பால் ஆயுர்வேதம் என்பது சமூக ஆரோக்கியம், மனநலம், மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆரோக்கியம், இரக்கம், கருணை, இனப்பெருக்கம் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயுர்வேதம் என்பது ஐந்தாவது வேதமாக கருதப்படுகிறது என்றும் திரு மோடி கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன் ஜாம் நகரில் உலகின் முதலாவது ஆயுர்வேத பல்கலைக் கழகம் நிறுவப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயுர்வேதத்தில் தரமான கல்வி நிறுவனத்தையும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் கொண்டிருப்பது ஜாம் நகர் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ், இந்த மையத்திற்கு ஆதரவு அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்த மையம் உண்மையில் உலகளாவிய திட்டம் என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் 107 உறுப்பு நாடுகள் தங்களின் அரசு அலுவலகங்களை கொண்டிருப்பதன் பொருள் பாரம்பரிய மருத்துவ தலைமை கொண்ட இந்தியாவை நோக்கி உலகம் வரும் என்பதாகும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!