பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 22.76 கோடி செலவு: மத்திய அரசு தகவல்

பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 22.76 கோடி செலவு: மத்திய அரசு தகவல்
X

பிரதமர் மோடி (பைல் படம்).

பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.22.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2019ம் ஆண்டில் இருந்து இதுவரை ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வகையில், 6.24 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. பிரதமரின் பயணங்களுக்கு ரூ.22.76 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணங்களுக்கு ரூ.20.87 கோடி, செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி 8 முறையும், பிரதமர் மோடி 21 முறையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 86 முறையும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

2019-க்கு பிறகு பிரதமர் மோடி ஜப்பானுக்கு மூன்று முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தலா இரண்டு முறையும் சென்றுள்ளார். ஜனாதிபதியின் 8 பயணங்களில், 7 பயணங்களை ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டார். தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரே ஒரு பயணம் மட்டும் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனுக்கு சென்று வந்தார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!