/* */

காந்தி ஜெயந்தி அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பான நாள் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காந்தி ஜெயந்தி நாளை கொண்டாப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பான நாள் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
X

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காந்தி ஜெயந்தி, நாளை கொண்டாப்படுவதை முன்னிட்டு, கீழ்கண்ட தகவலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், ''தேசத்தந்தையின் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நன்றியுள்ள நாட்டின் சார்பில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

அகிம்சை இயக்கத்துக்காக உலகம் முழுவதும் சிறப்பாக அறியப்பட்டவர் காந்திஜி. அவரது பிறந்த தினம் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அகிம்சை ஒரு தத்துவம், கொள்கை மற்றும் ஒரு அனுபவம். இது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமையும் என காந்திஜி நம்பினார். அவர் சுயராஜ்ஜியத்தை அடைவதற்கும், தீண்டாமையை ஒழிப்பதற்கும், சமூக தீமைகளை ஒழிப்பதற்கும், நமது விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

காந்தி ஜெயந்தி, அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பான நாள். காந்திஜியின் போராட்டம் மற்றும் தியாகத்தை நாம் நினைவு கூறும் சந்தர்ப்பம் இது. நமது நாட்டு மக்கள் , நாட்டின் வளம் மற்றும் மேம்பாட்டுக்கு பணியாற்ற இந்த நிகழ்வு நம்மை ஊக்குவிக்கிறது.

காந்தியடிகளின் போதனைகள், கருத்துக்கள் மற்றும் மதிப்புகளை பின்பற்றி, இந்தியாவை அவரது கனவு நாடாக மாற்றுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்போம்'' என்று கூறியுள்ளார்.

Updated On: 2 Oct 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்