பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து
![பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து](https://www.nativenews.in/h-upload/2021/04/13/1015670-president-ram-nath-kovind-confers-sangeet-natak-akademi-awards-fellowships.webp)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2021 ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு பிறப்பு, ரோங்காலி பிஹு, நப பர்ஷா மற்றும் வைசாகாடி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"புத்தாண்டு பிறப்பு, ரோங்காலி பிஹு, நப பர்ஷா மற்றும் வைசாகாடி புனித பண்டிகைகளை முன்னிட்டு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு முறைகளில் புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு பண்டிகைகள், நமது நாட்டின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை அடையாளப்படுத்துகின்றன. நமது விவசாயிகளின் ஓய்வில்லாத கடின உழைப்பின் மீதான மரியாதையையும் இந்தப் பண்டிகைகள் பிரதிபலிக்கின்றன.
இந்தத் தருணத்தில் நமது நாட்டு மக்களுக்கு அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை உண்டாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்காக சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பவும் நாம் உறுதி ஏற்போம். அனைவரும் உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய உத்வேகத்துடன் ஒன்றுபட்டு முன்னேறுவோம்."
இவ்வாறு குடியரசுத் தலைவர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu