ஈஸ்டரை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

ஈஸ்டரை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து
X

ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் புனித திருநாளில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு, என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்டரை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

மனித குலத்தின் மீட்பராக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, அன்பு, அமைதி, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனித இனத்தை ரட்சிப்பதற்கான பாதைக்கு ஒளியூட்டினார்.

அனைத்து மனிதர்களிடமும் கருணையை காட்டி ஈஸ்டரை நாம் கொண்டாடுவோம். இந்த பண்டிகை நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்."

என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai as the future