2024 பத்ம விருதுகள்: குடியரசுத்தலைவர் வழங்கினார்

2024 பத்ம விருதுகள்: குடியரசுத்தலைவர் வழங்கினார்
X
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தார்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலை, அறிவியல், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கௌவிக்கப்படுகின்றனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பொது விவகாரங்கள் பிரிவில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கலைப் பிரிவில் பிரபல பாடகி உஷா உதுப்புக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கௌரவித்தார். அதேபோல் விளையாட்டு பிரிவில் பிரபல டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.

2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் அனைவருக்கும் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கௌரவித்தார்.

Tags

Next Story
யமஹா கம்பெனியோட புது பைக் அப்டேட்டு 2025 சிறப்பான பைக்