உச்சநீதிமன்றதிற்கு ஐந்து புதிய நீதிபதிகள்: குடியரசுத்தலைவர் நியமனம்

உச்சநீதிமன்றதிற்கு ஐந்து புதிய நீதிபதிகள்: குடியரசுத்தலைவர்  நியமனம்
X

உச்சநீதிமன்றம்

கொலீஜியத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகளை குடியரசுத் தலைவர் சனிக்கிழமை நியமித்தார்.

கடந்த மாதம் டிசம்பரில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கொலீஜியத்தின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உச்சநீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்தார்.

இன்னும் இரண்டு பெயர்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட உள்ளன, அதன் பிறகு உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகளைக் கொண்ட முழுத் திறனுடன் செயல்பட முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பின்வரும் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நியமிக்கப்பட்ட ஐந்து நீதிபதிகளின் பெயர்கள்:

நீதிபதி பங்கஜ் மித்தல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதி சஞ்சய் கரோல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதி பிவி சஞ்சய் குமார், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, நீதிபதி, பாட்னா உயர்நீதிமன்றம்

நீதிபதி மனோஜ் மிஸ்ரா, நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றம்

Tags

Next Story
ai solutions for small business