போயிலா போய்ஷக் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து

போயிலா போய்ஷக் பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து
X

பிரதமர் நரேந்திர மோடி, போயிலா போய்ஷக் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள வங்காள மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகளை, ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "வங்காள மக்களிடம் காணப்படும், வாழ்வின் மீதான நேசமும், கொண்டாட்டங்களில் காட்டும் உற்சாகமும், உண்மையில் மனதைக் கவர்கின்றன. இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள வங்காள மக்களுக்கு போயிலா போய்ஷாக் பண்டிகை நல்வாழ்த்துகள் ! இந்த புத்தாண்டு, அனைவருக்கும் வளத்தையும், மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்" என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!