5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

5 மாநில தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்
X
5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் ஆலோசனைகளின் படி இன்று ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவித்துள்ளது.

5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் எப்போது முடிவடையும்?

  • மிசோரம் - 17 டிசம்பர்
  • சத்தீஸ்கர் - 3 ஜனவரி
  • மத்திய பிரதேசம் - 8 ஜனவரி
  • ராஜஸ்தான் - 14 ஜனவரி
  • தெலுங்கானா - 18 ஜனவரி

அத்துடன் மற்ற மாநிலங்களிலும் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்களை வகுக்க தேர்தல் ஆணைய முடிவு செய்தது.

சட்டசபை தேர்தல் தேதி 2023: இந்த ஆண்டு எந்தெந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது?

மத்திய பிரதேசம் - 230 இடங்கள்

சத்தீஸ்கர் - 90 இடங்கள்

ராஜஸ்தான் - 200 இடங்கள்

தெலுங்கானா - 119 இடங்கள்

மிசோரம் - 90 இடங்கள்

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

தேர்தல் தேதிகள் இதோ

மிசோரம் - நவம்பர் 7

சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17

மத்திய பிரதேசம் - நவம்பர் 17

ராஜஸ்தான் - நவம்பர் 23

தெலுங்கானா - நவம்பர் ௩௦


மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின் அட்டவணை

வேட்புமனு தாக்கல் ஆரம்ப தேதி: அக்டோபர் 21

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி: அக்டோபர் 30

வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி: அக்டோபர் 31

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி: நவம்பர் 2

வாக்குப்பதிவு தேதி: நவம்பர் 17

வாக்கு எண்ணும் தேதி: டிசம்பர் 3

மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் ஆரம்ப தேதி: அக்டோபர் 13

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி: அக்டோபர் 20

வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி: அக்டோபர் 21

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி: அக்டோபர் 23

வாக்குப்பதிவு தேதி: நவம்பர் 7

வாக்கு எண்ணும் தேதி: டிசம்பர் 3

ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலின் அட்டவணை

வேட்புமனு தாக்கல் ஆரம்ப தேதி: அக்டோபர் 30

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: நவம்பர் 6

வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி: நவம்பர் 7

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி: நவம்பர் 9

வாக்குப்பதிவு தேதி: நவம்பர் 23

வாக்கு எண்ணும் தேதி: டிசம்பர் 3

தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் ஆரம்ப தேதி: நவம்பர் 3

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி: நவம்பர் 10

வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி: நவம்பர் 13

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி: நவம்பர் 15

வாக்குப்பதிவு தேதி: நவம்பர் 30

வாக்கு எண்ணும் தேதி: டிசம்பர் 3


சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி:

முதல் கட்டத்திற்கு அக்டோபர் 13, இரண்டாம் கட்டத்திற்கு அக்டோபர் 21-ஆம் தேதி

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி:

முதல் கட்டத்திற்கு அக்டோபர் 20-ஆம் தேதி மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு அக்டோபர் 30-ஆம் தேதி

வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி:

முதல் கட்டத்திற்கு அக்டோபர் 21-ஆம் தேதி மற்றும்இரண்டாம் கட்டத்திற்கு அக்டோபர் 31-ஆம் தேதி.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான தேதி: முதல் கட்டத்திற்கு அக்டோபர் 23 ஆம் தேதி, இரண்டாம் கட்டத்திற்கு நவம்பர் 3 ஆம் தேதி

வாக்கெடுப்பு தேதி: நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17

வாக்கு எண்ணும் தேதி: டிசம்பர் 3

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story