ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: பிரதமர் மோடி திறப்பு

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: பிரதமர் மோடி திறப்பு
X
"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றங்களுக்கு இடையிலும் இந்தியாவை உறுதியுடன் வைத்திருப்பதில் நமது நாகரிகமும் கலாச்சாரமும் பெரும் பங்கு வகிக்கிறது" -பிரதமர் நரேந்திர மோடி

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர ஆஞ்சநேயரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மகாமண்டலேஷ்வர் மா கங்கேஸ்வரி தேவி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், மோர்பியில் 108 அடி உயர ஹனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேய பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றார். சமீப காலங்களில் பலமுறை பக்தர்கள் மற்றும் ஆன்மிகத் தலைவர்களுக்கு மத்தியில் தாம் இருக்க முடிவது குறித்து அவர் ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். யுனியா அன்னை, மாதா அம்பா ஜி மற்றும் அன்னபூர்ணா ஜி தாம் ஆகியோருடன் சமீபத்தில் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை அவர் குறிப்பிட்டார். இதை 'ஹரி கிருபா', அதாவது கடவுளின் அருள், என்று அவர் அழைத்தார்.

நாட்டின் நான்கு மூலைகளிலும் இதுபோன்ற நான்கு சிலைகளை நிறுவும் திட்டம் 'ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம்' என்ற உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் கூறினார். ஹனுமன் ஜி தமது சேவை மனப்பான்மையால் அனைவரையும் ஒன்றிணைப்பதாகவும், அனைவரும் அவரிடமிருந்து உத்வேகம் பெறுவதாகவும் அவர் விளக்கினார். ஆஞ்சநேயர் காடுகளில் வசிக்கும் சமூகங்களுக்கு கண்ணியத்தையும் அதிகாரத்தையும் பெற்ற வலிமையின் சின்னமாகும். "ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் முக்கிய பிணைப்பாக ஆஞ்சநேயர் திகழ்கிறார்" என்று அவர் மேலும் கூறினார்.

அதேபோல், நாடு முழுவதும் பல்வேறு வட்டாரங்களிலும் மொழிகளிலும் உள்ள ராமர் சரித்திரம், கடவுள் பக்தியில் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது என்று பிரதமர் விரிவாகக் கூறினார். இதுவே, நமது ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பலம். அடிமைத்தனத்தின் கடினமான காலத்திலும் தனித்தனி பகுதிகளை இது ஒன்றிணைத்தது. சுதந்திரத்திற்கான தேசிய உறுதிமொழியின் ஒருங்கிணைந்த முயற்சிகளை இது வலுப்படுத்தியது. "ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இடையூறுகளை எதிர்கொண்டு, இந்தியாவை உறுதியுடன் வைத்திருப்பதில் நமது நாகரிகமும் கலாச்சாரமும் பெரும் பங்காற்றியுள்ளன" என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

"நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை நமது நம்பிக்கையும் நமது கலாச்சாரத்தின் ஓட்டமும் ஆகும்" என்று பிரதமர் கூறினார். முழுத் திறமையுடையவராக பகவான் ராமர் இருந்தபோதிலும், ஒவ்வொருவரின் பலத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தியதில் இது பிரதிபலிக்கிறது. "அனைவருடன் - அனைவரின் முயற்சி என்பதற்கு ராமரின் சரித்திரம் ஒரு சிறந்த உதாரணம், ஹனுமனுக்கு இதில் முக்கிய பங்குண்டு" என்று கூறிய திரு மோடி, உறுதியை நிறைவேற்றுவதற்காக அனைவரின் முயற்சி தேவை என்றார்.

குஜராத்தியில் பேசிய பிரதமர், கேஷ்வானந்த் பாபுவையும் மோர்பியுடனான அவரது பழைய தொடர்பையும் நினைவு கூர்ந்தார். மச்சு அணை விபத்தை தொடர்ந்து ஹனுமன் தாம் ஆற்றிய பங்கை அவர் நினைவு கூர்ந்தார். விபத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்கள் கட்ச் நிலநடுக்கத்தின் போதும் உதவியது என்றார் அவர். மோர்பி இன்று தொழில்துறையின் செழிப்பான மையமாக இருப்பதால் அதன் முன்னேற்றத்தை அவர் குறிப்பிட்டார். ஜாம்நகரில் பித்தளை, ராஜ்கோட்டில் பொறியியல் மற்றும் மோர்பியில் கடிகார தொழில் ஆகியவற்றைப் பார்த்தால், 'மினி ஜப்பான்' போன்ற உணர்வைத் தருகிறது என்று பிரதமர் கூறினார்.

கத்தியவாரை சுற்றுலா மையமாக யாத்ரா தாம் மாற்றியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மோர்பிக்கு மகத்தான நன்மைகளை வழங்கும் மாதவ்பூர் மேளா மற்றும் ரான் உத்சவ் பற்றி அவர் பேசினார். தூய்மை இயக்கத்திற்காக பக்தர்கள் மற்றும் சந்த் சமாஜத்தின் உதவியைப் பெறுவதற்கான தமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, உள்ளூர் பிரச்சாரத்திற்காக குரல் கொடுத்து தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

#Hanumanji4dham திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ள 4 சிலைகளில் இரண்டாவது சிலை இன்று திறக்கப்பட்டது. மேற்கில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபுகேஷ்வானந்த் ஜியின் ஆசிரமத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் முதல் சிலை வடக்கே சிம்லாவில் 2010-ல் அமைக்கப்பட்டது. தெற்கில் ராமேஸ்வரத்தில் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!