பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை
X
பிரதமர் நரேந்திரமோடி 
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

உலக அச்சுறுத்தி வந்த கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா தடுப்பூசி தயாரித்து, சிறப்பாக கையாண்டு வருகிறது. நம் நாட்டில் ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கு முதலில் முன்னுரிமை தரப்பட்டது. பின்னர் படிப்படியாக தடுப்பூசி பணிகள் விரிவுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியா தனது தடுப்பூசி பயணத்தில் நேற்று புதிய மைல் கல்லை எட்டியது. பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்காக, இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து உள்ளன.

இச்சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். புதிய சாதனை எட்டப்பட்ட நிலையில் பிரதமர் உரையாற்றுவதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Next Story
ai in future agriculture