ஜெர்மனி,டென்மார்க்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர்மோடி சுற்றுப்பயணம்

ஜெர்மனி,டென்மார்க்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர்மோடி சுற்றுப்பயணம்
X
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வருகிற மே மாதம் முதல் வாரத்தில் 3 நாடுகளுக்கு செல்கிறார்-

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வருகிற மே மாதம் முதல் வாரத்தில் 3 நாடுகளுக்கு செல்கிறார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் இரண்டாவது இந்தியா -நார்டிக் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நார்டிக் அமைப்பின் உறுப்பு நாடுகளான நார்வே, ஐஸ்லாண்ட், டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, ஆகிய 5 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி, பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அவர்களை நேரில் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தோ ஜெர்மன் ஐ.ஜி.சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இருப்பினும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself