ஏழைகள் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்த எம்.ஜி.ஆர்: பிரதமர் மோடி புகழாரம்

ஏழைகள் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்த எம்.ஜி.ஆர்: பிரதமர் மோடி புகழாரம்
X

எம்.ஜி.ஆர். 

ஏழைகள் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் என்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மக்கள் திலகம் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வரும் அதே வேளையில், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது. அரசு சார்பில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்விக்கப்பட்டது.


இந்த நிலையில், எம்ஜிஆர் பிறந்த நாளை பிறந்த நாளை பிரதமர் நரேந்திர மோடியும் நினைவு கூர்ந்துள்ளார். இதையொட்ட்டி, பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "பாரத ரத்னா எம்.ஜி.ஆரை, அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்