ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார்.
பிரதமர் ஆன பிறகு மோடி நேபாளத்துக்கு செல்வது இது 5-வது முறை. ஆனால், புத்தர் பிறந்த ஊரான லும்பினிக்கு முதல் முறையாக செல்கிறார்.
புத்த ஜெயந்தியை முன்னிட்டு, லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி கோவிலில் தரிசனம் செய்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக நேபாளத்துக்கு சென்றிருந்தபோது, மாயதேவி கோவிலுக்கு ஒரு போதி மரக்கன்றை மோடி பரிசளித்து இருந்தார். யதேவி கோவில் தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். புத்த கலாசார பாரம்பரிய மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர், பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். நீர்மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். பின்னர் இருநாடுகள் இடையே கல்வி, கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும்வகையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
அதன்படி, லும்பினி புத்த பல்கலைக்கழகம், திரிபுவன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. காத்மாண்டு பல்கலைக்கழகத்துடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.
இதுதவிர, சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நேபாள கல்வி நிறுவனங்கள் இடையே 2 ஒப்பந்தங்கள் ைகயெழுத்தாகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu