Narendra Modi Assam foundation stone projects-ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி.
PM Modi to launch health infra projects worth ₹3,400 cr in Assam on Friday-ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி அசாம் செல்கிறார். இந்த பயணத்தின் போது கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மற்றும் மாநிலத்தில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தியில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையானது அசாம் மாநிலம் மற்றும் முழு வடகிழக்கு பகுதிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும். இந்த மருத்துவமனையை கட்டமைக்க ரூ.10 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்டது. 1120 கோடி செலவில், 30 ஆயுஷ் படுக்கைகள் உட்பட 750 படுக்கைகள் கொண்ட கவுகாத்தி எய்ம்ஸ் அதிநவீன மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் 100 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கும் திறன் இருக்கும். இந்த மருத்துவமனை வடகிழக்கு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கும்” என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்ற மூன்று மருத்துவக் கல்லூரிகள்:
நல்பாரி மருத்துவக் கல்லூரி, நாகோன் மருத்துவக் கல்லூரி, மற்றும் கோக்ரஜார் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவ கல்லூரிகளும் சுமார் ரூ. 615 கோடி, ரூ. 600 கோடி மற்றும் ரூ. 535 கோடி செலவில் கட்டப்பட்டடுள்ளது.
இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி அசாம் மேம்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு (AAHII) அடிக்கல் நாட்டுவார் மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) அட்டைகளை விநியோகிப்பதன் மூலம் ‘ஆப்கே துவார் ஆயுஷ்மான்’ பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனை தொடர்ந்து கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் பிளாட்டினம் ஜூபிலி நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதனையடுத்து நம்ரூப்பில் உள்ள 500 TPD மெந்தோல் ஆலையை துவக்கி வைத்தல் , பலாஷ்பரி மற்றும் சுவல்குச்சியை இணைக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது பாலத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ஐந்து புதிய ரயில்வே திட்டங்களை துவக்கிவைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து நாட்டு அர்ப்பணிக்க உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu