9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இன்று தொடங்கி வைக்கும் பிரதமர்
வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்
புதிய வந்தே பாரத் ரயில்கள் உதய்பூர் - ஜெய்ப்பூர்; திருநெல்வேலி-மதுரை- சென்னை; ஹைதராபாத் - பெங்களூரு; விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக); பாட்னா - ஹவுரா; காசர்கோடு - திருவனந்தபுரம்; ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி; ராஞ்சி - ஹவுரா; மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் இடையே இயக்கப்படும்.
இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் பயன்பெறுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாகும். வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கத்தின் வழித்தடங்களில் வேகமான ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும என்று கூறியது.
ரூர்கேலா- புவனேஸ்வர் - பூரி மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடத்தில் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடுகையில், வந்தே பாரத் ரயில்கள் அந்தந்த இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் மூன்று மணி நேரம் குறைக்கும்; ஹைதராபாத் - பெங்களூரு 2.5 மணி நேரத்திற்கும் மேலாகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை இடையே2 மணி நேரத்திற்கும் மேலாக குறைக்கும்
ராஞ்சி - ஹவுரா மற்றும் பாட்னா - ஹவுரா மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் இடையேயான பயண நேரம், தற்போது உள்ள அதிவேக ரயில்களுடன் ஒப்பிடும் போது சுமார் ஒரு மணிநேரம் குறைக்கப்படும். உதய்பூர் - ஜெய்ப்பூர் இடையிலான பயண நேரம் சுமார் அரை மணி நேரம் குறைக்கப்படும்.
ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி மற்றும் திருநெல்வேலி-மதுரை-சென்னை ரயில்கள் முக்கிய மத நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும்.
மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு, திருப்பதி யாத்திரை தலங்களுக்கு இணைப்பை வழங்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu