சாமான்யக் குடும்பத்தில் பிறந்தவரும் நாட்டின் உயர் பதவிக்கு வரமுடியும் -பிரதமர் மோடி

சாமான்யக் குடும்பத்தில் பிறந்தவரும் நாட்டின் உயர் பதவிக்கு வரமுடியும் -பிரதமர் மோடி
X
“சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும், தற்போது உள்ளது போன்று நாட்டை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன. பிரதமர்களின் அருங்காட்சியக திறப்பு விழாவில் பிரதமர் மோடி.



புது தில்லியில் பிரதமர்களின் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினரை பிரதமர் மோடி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். பாபாசாஹேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-


"பாபாசஹேப் சிற்பியாக இருந்து உருவாக்கிய அரசியல் சாசனம், நாடாளுமன்ற நடைமுறையின் அடிப்படையை நமக்கு தந்துள்ளது. இந்த நாடாளுமன்ற நடைமுறையின் முக்கியப் பொறுப்பு, நாட்டின் பிரதமர் அலுவலகத்தை சார்ந்ததாக உள்ளது. பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம் ஆகும்.

"நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்த வேளையில், இந்த அருங்காட்சியகம் ஒரு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது," என்றி பிரதமர் தெரிவித்தார். இந்த 75 ஆண்டுகளில் நாடு எத்தனையோ பெருமைக்குரிய தருணங்களைக் கண்டுள்ளது என்றும், வரலாற்றின் சாளரத்தில் இந்த தருணங்களின் முக்கியத்துவம் ஒப்பிடமுடியாதது.


சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசம், நாட்டை தற்போதைய உயரத்திற்கு கொண்டு செல்வதில் பங்களித்துள்ளது என்றும் செங்கோட்டையிலிருந்தும் பலமுறை தாம் இதை மீண்டும் மீண்டும் கூறியிருப்பதாகவும் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு அரசாலும் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் உயிரோட்டத்தின் பிரதிபலிப்பாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.


ஜனநாயகத்தின் இலக்குகளை அடைவதற்கு நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவு கூர்வது என்பது சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிந்து கொள்ள உதவிடும். இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் மக்கள், நாட்டின் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பு, அவர்களின் பின்னணி, அவர்களின் போராட்டங்கள் மற்றும் படைப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடியும். பிரதமர்களில் பலர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.


மிகவும் ஏழ்மையான, விவசாயக் குடும்பங்களில் இருந்து வரும் இத்தகைய தலைவர்கள் பிரதமர் பதவிக்கு வருவது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அதன் மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட இந்திய ஜனநாயக அமைப்பில் மிக உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இது இளைஞர்களுக்கு அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். இந்த அருங்காட்சியகம் இளம் தலைமுறையினரின் அனுபவத்தை விரிவுபடுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சுதந்திர இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி நமது இளைஞர்கள் எவ்வளவு தெரிந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் முடிவுகள் பொருத்தமானதாக இருக்கும்.


இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் வளமான சகாப்தத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நாட்டின் பாரம்பரியம் மற்றும் நிகழ்காலம் பற்றிய சரியான விழிப்புணர்வைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். திருடப்பட்ட பாரம்பரியமிக்க கலைப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து திரும்ப கொண்டு வருவதில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், புகழ்பெற்ற பாரம்பரிய இடங்களை கொண்டாடவும், ஜாலியன் வாலா பாக் நினைவிடம், பஞ்சதீர்த் பாபாசாகேப் நினைவகம், சுதந்திர போராட்ட அருங்காட்சியகம், பழங்குடியினர் வரலாற்று அருங்காட்சியகம் போன்ற இடங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை அரசு பாதுகாக்கிறது. என்று பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் கூறினார்.


அசோக சக்கரத்தை பல கைகள் தாங்கிப் பிடித்திருப்பது போன்று இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், வளமான எதிர்காலம் மற்றும் கடின உழைப்பு குறித்த உறுதிப்பாடு மற்றும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம் தான் இந்த சக்கரம் என்றும் தெரிவித்தார். இந்த உறுதிப்பாடு, உணர்வு மற்றும் வலிமை, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மாறிவரும் உலக நடைமுறை மற்றும் அதன் காரணமாக, இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "தற்போது, புதிய உலக நடைமுறைகள் உருவாகியுள்ள நிலையில், இந்த உலகம், இந்தியாவை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது, அதனால், இந்தியாவும் காலத்திற்கேற்ற வளர்ச்சியடைவதற்கான தனது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்" என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி; கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, மத்திய கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்; நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (NMML) நிர்வாகக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா; முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!