இந்திய சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் மோடி
இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதிகள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டின் பிரதமராக சுதந்திர தினத்தன்று 10-வது முறை பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்! என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியை ஏற்றிய பின், இன்று காலை 7.30 மணிக்கு தொடர்ந்து 10வது சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார். செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 1800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா - 140 கோடி குடும்பங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். “மக்கள் தொகை அடிப்படையில் நம்பர் 1 நாடு. நாம் அனைவரும் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்
மணிப்பூர் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசம் மணிப்பூருடன் உள்ளது. அமைதியின் மூலம் தீர்வு காண்போம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும்.
அடுத்த 1000 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகள் தீர்மானிக்கும் இன்று நம்மிடம் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளது - இவை மூன்றும் சேர்ந்து நாட்டின் கனவுகளை நனவாக்கும் திறன் பெற்றுள்ளது.
மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மூன்றும் தேசத்தின் கனவுகளை நனவாக்கும் ஆற்றல் கொண்டது. நாட்டிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன், இந்த காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம், நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் நாம் எடுக்கும் முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக. வரும் 1000 ஆண்டுகளில் நாட்டின் பொன்னான சரித்திரத்தை படைக்கும் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu