விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
X

விமானப்படை சாகச நிகழ்ச்சி

89-வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

89-வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப்படை அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய விமானப்படையின் விமானங்கள் வானில் பறந்து விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்தின.

விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில் "நமது படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் விமானப்படை தினத்தில் எனது வாழ்த்துக்கள். தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு அடையாளமாக இந்திய விமானப்படை திகழ்கிறது. நாட்டை பாதுகாப்பதிலும் சவாலான காலங்களில் மனிதாபிமான செயல்களினாலும் அவர்கள் தங்களை தனித்து காட்டியுள்ளனர்.", என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!