குஜராத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய பிரதமர் மோடி

குஜராத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய பிரதமர் மோடி
X

ராணுவ வீரர்களுக்கு தனது கையால் இனிப்பு ஊட்டிய பிரதமர் மோடி.

குஜராத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி இன்று கொண்டாடினார்.

தீபாவளி 2024: தனது கைகளால் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி, பிரதமர் மோடி, கட்ச்சில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில்முதன்மையானது தீபாவளி. இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வாழும் இந்துக்களும் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். ஆண்டி முதல் அரசன் வரை கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி இருப்பதால் நாட்டின் தலைமை பதவியில் இருப்பவர்கள் கொண்டாடும் தீபாவளி சிறப்பான இடத்தை பெற்று வருகிறது.

அந்த வகையில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் கட்ச் நகரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கட்ச்சில் உள்ள சர் க்ரீக் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் பிஎஸ்எப் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் தனது கைகளால் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் கட்ச் நகரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை வியாழக்கிழமை கொண்டாடினார். கட்ச்சில் உள்ள சர் க்ரீக் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் பிஎஸ்எப், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் தனது கைகளால் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அங்கேயே. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்ஏசியில் ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!