பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
X
தேசக் கட்டமைப்பை நோக்கிய இந்தியாவின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகம் அமைகிறது

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை (சங்ரஹாலயா) ஏப்ரல் 14 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் போது தொடங்கி வைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், இந்திய பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் மூலம் சுதந்திரதத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றை எடுத்துரைக்கும்.

தேசக் கட்டமைப்பை நோக்கிய இந்தியாவின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடனான கருத்துருவாக்கத்தில் அமையவிருக்கும் இந்த அருங்காட்சியகம் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பிரதமர்களின் சித்தாந்தம் அல்லது பதவி வகித்த காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் புகழ் சேர்ப்பதாக இருக்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அனைவரையும் உள்ளடக்கும் முயற்சியான இது, நமது பிரதமர்கள் அனைவரின் தலைமை, தொலைநோக்குப் பார்வை, சாதனைகள் பற்றி இளம் தலைமுறையினருக்கு தெரிவிப்பதையும், ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

பழமையையும், புதுமையையும் கலந்து பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அருங்காட்சியகம், பிளாக் -1 என வடிவமைக்கப்பட்ட முந்தைய தீன் மூர்த்தி பவனையும், பிளாக்-2 என வடிவமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தையும் இணைப்பதாக இருக்கும். இந்த இரண்டு பிளாக்குகளின் மொத்த பரப்பு, 15,600 சதுர மீட்டராகும்.

இந்த அருங்காட்சியக கட்டடத்தின் வடிவமைப்பு எழுச்சிபெறும் இந்தியாவின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டு அதன் தலைவர்களின் கைகளால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் வடிவமைப்பு நீடிக்கவல்ல மற்றும் எரிசக்தி சேமிப்பு நடைமுறைகளைக் கொண்டது. இந்தப் பணியின்போது மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை அல்லது வேறு இடத்தில் மாற்றி நடப்படவில்லை. தேசத்தையும், ஜனநாயகத்தையும் அடையாளப்படுத்தும் வகையில், தர்மசக்கரத்தை இந்திய மக்கள் கைகளில் தாங்கியிருப்பது போல் அருங்காட்சியகத்தின் இலச்சினை இருக்கும்.

இந்த அருங்காட்சியகத்துக்கான தகவல்கள், பிரசார் பாரதி, தூர்தர்ஷன், திரைப்படப்பிரிவு, சன்சாத் டிவி, பாதுகாப்பு அமைச்சகம், ஊடக இல்லங்கள் (இந்தியா மற்றும் வெளிநாடு), வெளிநாட்டு செய்தி முகமைகள் போன்ற தரவுகள், தகவல் களஞ்சியங்கள் மூலம் திரட்டப்பட்டவை. பொருத்தமான ஆவணப்பயன்பாடு (தொகுப்பு நூல்கள், இலக்கிய படைப்புகள், முக்கியமான கடிதப் போக்குவரத்துகள்), சில தனிப்பட்ட பொருட்கள், பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள், (பாராட்டுக்கள், கவுரவிப்புகள், விருதுகள், நினைவு அஞ்சல் தலைகள், நாணயங்கள் இன்னபிற) பிரதமர்களின் உரைகள், சித்தாந்தங்களின் பிரதிபலிப்பான கருத்துக்கள், பிரதமர்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், மையப்பொருள்களாக இதில் எதிரொலிக்கும்.

உள்ளடகத்தில் பலவகையான விஷயங்களைக் கொண்டுவர நவீன தொழில்நுட்ப அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுழலும் காட்சி அமைப்பு, முப்பரிமாண வடிவமைப்பு, மெய்நிகர் காட்சிகள், தொடுதிரைகள், பல்வகை ஊடகம், கலந்துரையாடும் அரங்குகள், கணினிமாயமாக்கப்பட்ட இயங்கும் சிற்பங்கள், திறனறி பேசிகளின் (ஸ்மார்ட் ஃபோன்கள்) பயன்பாடுகள் போன்றவற்றுடன் கண்காட்சியின் உள்ளடக்கம், உயர் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்.

இந்த அருங்காட்சியகத்தில் 43 காட்சிக் கூடங்கள் உள்ளன. விடுதலைப் போராட்டம் குறித்த காட்சி பதிவுகளில் தொடங்கி, அரசியல் சட்டத்தை வடிவமைத்தல் உட்பட நமது பிரதமர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்துவகை முன்னேற்றத்தை எவ்வாறு உறுதி செய்திருக்கிறார்கள் என்ற வரலாற்றை இந்த அருங்காட்சியகம் வெளிப்படுத்தும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!