பொறியாளர் தினம்: பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்து

பொறியாளர் தினம்: பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்து
X

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி

பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நமது பூமியை சிறப்பானதாக்கி தொழிநுட்ப நவீனமயமாக்கலுக்கு முக்கிய பங்களிக்கும் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் இத்துறையில் முன்னோடியாக திகழ்ந்த எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினத்தில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் இன்று பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். விஸ்வேஸ்ரய்யாவின் சாதனைகளை இன்று நினைவு கூர்வோம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்