ரஜினிகாந்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது பிரதமர் வாழ்த்து
51வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார். இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும்.
தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
திரு ரஜினிகாந்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல தலைமுறைகளைக் கடந்த பிரபலம், வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் பெருமைமிகு படைப்பாற்றல், பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்கள், அனைவரின் அன்பிற்கு உரியவரான ஆளுமை.... அதுதான் நீங்கள், திரு ரஜினிகாந்த் அவர்களே.
தலைவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள், என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu