இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனக் கண்காட்சியில் உரையாற்றும் பிரதமர்

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனக் கண்காட்சியில் உரையாற்றும் பிரதமர்
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

இந்தியாவின் மிகப்பெரிய, முதலாவது உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024-ல் பிரதமர் நாளை உரை நிகழ்த்துகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய, முதலாவது உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024-ல் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024 பிப்ரவரி 2 அன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய, முதலாவது உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024-ல் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவின் திறன்களை இக்கண்காட்சி வெளிப்படுத்தும். இதில் கண்காட்சிகள், மாநாடுகள், வாங்குவோர்-விற்போர் சந்திப்புகள், மாநில அரசுகளின் சார்பிலான அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்குகள், கோ-கார்ட்டிங் எனப்படும் கார் பந்தயம் போன்றவை இடம்பெறும்.

50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 800 கண்காட்சியாளர்களுடன், அதிநவீன தொழில்நுட்பங்கள், நீடித்தத் தீர்வுகள், போக்குவரத்து வாகன உற்பத்தியில் உள்ள முன்னேற்றம் ஆகியவற்றை இக்கண்காட்சி முன்னிலைப்படுத்தும். இதில் 28-க்கும் அதிகமான வாகன உற்பத்தியாளர்களும், 600-க்கும் அதிகமான வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். 13-க்கும் அதிகமான உலகளாவிய சந்தைகளில் இருந்து 1000-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த நிகழ்வில் தங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், சேவைகளைக் காட்சிப்படுத்தும்.

மாநிலங்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள போக்குவரத்து வாகன உற்பத்திப் பங்களிப்பை விளக்கும் வகையில் மாநில அரசுகளின் அமர்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியக் கடலோரக் காவல் படையின் @indiacoastguard 48-வது ஆண்டு அமைப்பு தினத்தில், அதன் அனைத்துப் பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடல்சார் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பு இணையற்றது. அவர்களின் அசைக்க முடியாத விழிப்புணர்வு, சேவைக்காக இந்தியா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி