வர்த்தகத்துறை புதுப்பிப்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு
எதிர்காலத்துக்கு தயார்ப்படுத்தும் வகையில், வர்த்தகத்துறையை புதுப்பித்தல் மற்றும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கூட்டத்துக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். வர்த்தகத்துறையை வலுப்படுத்துவது , 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதி இலக்குகளை 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரத்துவதற்கு தேவையான சூழல்களை அமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மற்றும் இதர அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். ஏற்றுமதிகள், சாதனை இலக்குகளை குறித்த நேரத்தில் அடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வேகமான சேவை வளர்ச்சி, பருவநிலை மாற்ற பாதிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களால், பல வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதனால் அதற்கேற்ப ஏற்றுமதிகளை உடனடியாக மேம்படுத்தி, உலக வர்த்தகத்தில் இந்தியாவின் அடையாளத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்குான தேவைகளுக்கு ஏற்றபடி கட்டமைப்புகளை உருவாக்குவதுதான் வரத்தகத்துறை புதுப்பிப்பின் நோக்கம். நவீன கால திறன்களுக்கு ஏற்ப வர்த்தகத்துறையின் செயல்பாட்டை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு, வழக்கமான நடைமுறைகளில் இருந்து புதிய நடைமுறைக்கு மாற வேண்டும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள திறமையாளர்கள் மற்றும் நிபுணர்கள் இணைய வேண்டும். அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் சந்தை வாய்ப்புகளைப் பெறவும், ஏற்றுமதித் தேவைகளை நிறைவேற்றவும், சுறுசுறுப்பான அமைப்பை வர்த்தகம் மற்றும் தொழில் துறை பெற வேண்டும். வரத்தகத்துறையை எதிர்காலத்துக்கு தயார்படுத்துவதற்காக ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வளர்ச்சி யுக்திகளை வகுக்கவும், ஏற்றுமதி இலக்குகளை உருவாக்கவும், பிரத்தியேக வர்த்தக வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தப்படும், இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu