பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ.4,55,069 கோடி

பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ.4,55,069 கோடி
X
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி மற்றும் மேல் வரியாக ரூ. 4,55,069 கோடி வசூல்.

மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையிலிருந்து மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய், மாநில அரசுகள் வசூலித்த விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி விவரங்களை தெரிவித்தார்.

2020-21ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ.4,55,069 கோடி. விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு வரியாக தமிழகம் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.17,063 கோடியும், புதுச்சேரி ரூ.10 கோடியும் வசூலித்துள்ளன.

Tags

Next Story