வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்
பைல் படம்.
2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் கட்டாயம் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இது தொடர்பாக, வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மார்ச் மாதத்திற்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. எனவே, அவகாசம் நிறைவடைவதால், கணக்கு தாக்கல் செய்யாதோர், விரைவில் தாக்கல்செய்ய வேண்டும். இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu