வந்தது அடுத்த அறிவிப்பு: நாடாளுமன்றத்தில் இதற்கும் தடை
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியலிட்டு மத்திய அரசு ஒரு புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது.
பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில், ஆளும் கட்சியை சுட்டிக்காட்டி எம்.பிக்கள் பேசும் அனைத்து வார்த்தைகளும் அதில் அடங்கி விட்டன. இதற்கு பதிலாக அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்ற ஒற்றை உத்தரவு போதுமே என விமர்சனம் கிளம்பிபது.
அதேபோல் மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களைக் கண்டித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம். அதற்கும் தடைவிதித்து மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபடுவதற்கும், மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு புதிய தடையை மாநிலங்களவை செயலகம் அறிவித்திருக்கிறது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு, பதாகைகளை கிழித்தெறிந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இவற்றை தடுக்கும் பொருட்டே இந்த புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இருப்பினும், இதுபோன்ற ஒரு சுற்றறிக்கை வெளிவருவது இது முதல் முறையல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது வெளியிடப்பட்ட இதுபோன்ற பல சுற்றறிக்கைகள் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu