மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இடைநீக்கம்: சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இடைநீக்கம்: சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி
X

இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள்

அமளியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம், ஜோதிமணி ஆகியோரை மக்களவை சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமளியில் ஈடுபட்டதாக , காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவை சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர்.

கடந்த வாரம் முழுவதும் முழுவதும் எதிர்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது. இன்று மக்களவை கூடிய போதும் அதே சூழல் தான் ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது, தொடர் முழக்கங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலை தொடர்ந்ததையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 2 மணியளவில் அவை தொடங்கிய போதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தீர்மானம் கொடுக்கப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai tools for education