கர்நாடகா தசரா விழாவில் பீதியடைந்த யானை: உயிர் சேதம் தவிர்ப்பு

கர்நாடகா தசரா விழாவில் பீதியடைந்த யானை: உயிர் சேதம் தவிர்ப்பு
X

தசரா விழாவில் பீதி அடைந்த யானை.

கர்நாடகாவின் ஸ்ரீரங்கபட்டனா தசரா விழாவில் யானை பீதியடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம், மண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டனா பகுதியில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. மேலும் மேளம், வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.

அப்போது அளவுக்கு அதிகமான சத்தத்த்தை கேட்டு சாமியை ஏந்திய யானை பீதியடைந்து, சுற்றி சுழன்றி பொதுமக்களை விரட்டியது. உடனடியாக அருகில் வந்த மாஹூட்ஸ் யானையைக்கொண்டு பாகன்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த யானை சமாதானம் ஆனது. இதனால் அங்கு உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!