தற்காலிகமாக மூடப்பட்ட பாலருவி: கேரளா வனத்துறை

தற்காலிகமாக மூடப்பட்ட பாலருவி: கேரளா வனத்துறை
X

பாலருவி (பைல் படம்)

தண்ணீரின்றி வறண்டதால் பாலருவியானது தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லையில் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலாப் பயணிகளை விட , தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். மேலும், கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தளத்தில் , நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளிப்பார்கள்.

இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக , தண்ணீரின்றி பாலருவி வறண்டு காணப்படுகிறது. மேலும், தற்போதைய காலத்தில் பராமரிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பாலருவியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக , கேரளா வனத்துறையினர் அறிவித்துள்ளனர். ஆகவே, இரு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் யாரும் பாலருவிக்கு வர வேண்டாமென கேரள வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!