கட்டண சேவை டிக்கெட்டுகள் மார்ச் 23ம் தேதி வெளியிடப்படும்: திருப்பதி தேவஸ்தானம்

கட்டண சேவை டிக்கெட்டுகள் மார்ச் 23ம் தேதி வெளியிடப்படும்: திருப்பதி தேவஸ்தானம்

பைல் படம்.

ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள் வரும் மார்ச் 23ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான கோவில் ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள் வரும் மார்ச் 23ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற கட்டண சேவைகளில் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர். இவற்றுக்கான ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

அதேபோல் ஜூன் மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் வரு 24ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் www. tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டைகளை பயன்படுத்தியே முன்பதிவு செய்யமுடியும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story