காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங் கைது நடவடிக்கை: பஞ்சாபில்இணைய சேவை முடக்கம்
காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங்
காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்கியதையடுத்து, பஞ்சாப் முழுவதும் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தீவிர சீக்கிய தலைவரும் காலிஸ்தானி அனுதாபியுமான அம்ரித்பால் சிங் கடந்த சில வாரங்களாக பஞ்சாபில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் கடந்த மாதம் அமிர்தசரஸ் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சனியன்று, அம்ரித்பாலின் ஆறு உதவியாளர்கள் ஜலந்தரில் கைது செய்யப்பட்டனர்.
'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவரின் ஆதரவாளர்கள் சிலர், காவல்துறையினர் தங்களை துரத்துவதாக கூறி சில வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அம்ரித்பால் ஒரு வாகனத்தில் அமர்ந்திருப்பதையும் ஒரு வீடியோ காட்டியது.
இந்நிலையில் பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை வரை இணைய சேவைகள் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இணையம் இடைநிறுத்தப்பட்டதால், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறும், பீதி, போலிச் செய்திகள் அல்லது வெறுப்புப் பேச்சுகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பஞ்சாப் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாப் காவல்துறை தனது ட்விட்டரில், "பஞ்சாப் போலீசார் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளது
பஞ்சாபில் உள்ள அனைத்து மொபைல் இணைய சேவைகள், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் அனைத்து டாங்கிள் சேவைகளும், குரல் அழைப்பு தவிர, மார்ச் 18 (12:00 மணி நேரம்) முதல் 19 ஆம் தேதி 18 (12:00 மணி நேரம்) வரை நிறுத்தப்படும் என்று அரசு கூறியது.
அம்ரித்பால் சிங் ஒரு சர்ச்சைக்குரிய சீக்கிய தலைவர் ஆவார், அவர் 2022 இல் விபத்தில் கொல்லப்பட்ட தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட வாரிஸ் பஞ்சாப் டியின் தலைவராக உள்ளார்.
ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது கொல்லப்பட்ட பிந்திரன்வாலே போலவே இருப்பதால், அவரது ஆதரவாளர்களால் பிந்தரன்வாலே 2.0 என்று அழைக்கப்படுகிறார்.
அம்ரித்பால் சிங் 2022 இல் இந்தியா வந்து வாரிஸ் பஞ்சாப் டியின் தலைமையை பிடித்தார். இதற்கு முன் துபாயில் வேலை பார்த்து வந்தார். அம்ரித்பால் சிங்கிற்கு ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர், மேலும் அவர் தனது ஆதரவாளர்களால் சூழப்பட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதைக் காணலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu