லடாக்: பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்ற ராகுல் காந்தி
பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்ற ராகுல்காந்தி
லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சனிக்கிழமை பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார்
ராகுல் காந்தி பைக் ஓட்டும் படங்களை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சில புகைப்படங்களையும் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
லேவில் இருந்து கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரிக்கு ராகுல் காந்தி பைக் ரைடு சென்றார். அதன் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன், " என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகமான இடங்களில் இதுவும் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.
விவரங்களின்படி, பாங்காங் ஏரியில், ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20 அன்று கலநடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வார் .
வெள்ளிக்கிழமை, லடாக்கில் உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி ந்துரையாடினார். பின்னர், மாவட்டத்தில் கால்பந்து போட்டியிலும் விளையாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu