இந்தியாவில் 50 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ஓலா திட்டம்
ஒரு கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் வருடாந்திர இலக்கை அடைய ஓலாவுக்கு 40 ஜிகாவாட் பேட்டரி திறன் தேவைப்படும். அதற்காக , 50 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி செல் உற்பத்தி ஆலையை இந்தியாவில் கட்ட திட்டமிட்டுள்ளது.
மீதமுள்ளவை எதிர்காலத்தில் தயாரிக்க திட்டமிட்டுள்ள எலக்ட்ரிக் கார்களுக்காக பயன்படுத்தப்படும் என கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்குள் 1 ஜி.வா பேட்டரி திறனை அமைத்து, அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளில் 20 ஜி.வா ஆக விரிவுபடுத்துவதே ஆரம்பத் திட்டமாகும். இதற்கு மட்டும் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு தேவைப்படும்.
தற்போது தென் கொரியாவில் இருந்து பேட்டரி செல்களை இறக்குமதி செய்யும் ஓலா, மேம்பட்ட செல் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பேட்டரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை அமைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் எண்ணெய் இறக்குமதி கட்டணத்தை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் நிறுவனங்கள் சுத்தமான எரிபொருள் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதற்காக 6 பில்லியன் டாலர்கள் வரை ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, மேலும் ஓலா நிறுவனமும் ஏலத்தில் ஈடுபட்டுள்ளது.
நிறுவனம் இன்னும் ஸ்கூட்டர் உற்பத்தியை கணிசமான அளவிற்கு அதிகரிக்காத நிலையில் பேட்டரி திட்டங்கள் வந்துள்ளன. ஓலா தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்கிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இருபது லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய இலக்காகக் கொண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu