வடகிழக்கில் பிரசார் பாரதியின் டிஜிட்டல் நெட்வொர்க் வளர்ச்சி
பிரசார் பாரதியின் டிஜிட்டல் நெட்வொர்க், வருவாயைச் சார்ந்த வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி இந்திய டிஜிட்டல் ஊடகத் துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது.
அரசு ஒலிபரப்பாளருக்கான பணியை டிஜிட்டல் உலகிலும் திறம்படச் செய்து வரும் பிரசார் பாரதியின் டிஜிட்டல் தளங்கள், வடகிழக்கில் உள்ள தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைந்து, யூடியூபில் 220 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று முக்கியமான மைல்கற்களை எட்டியுள்ளன.
சமீபத்திய சாதனைகளில் ஒன்றாக, தூர்தர்ஷன் ஐஸ்வாலின் யூடியூப் சேனல் ஒரு இலட்சம் சந்தாதாரர்களைக் கடந்துள்ளது. உயர்தர நாடகங்கள், தொலைக்காட்சி சித்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
வடகிழக்குப் பிராந்தியத்தில் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் டிவிட்டர் பக்கங்கள் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளன. இவர்களில் பலருக்கு நீல நிற (டிக்) சரிபார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிடி மிசோரம், டிடி கவுகாத்தி, டிடி ஷில்லாங் மற்றும் அகில இந்திய வானொலியின் வடகிழக்குச் சேவையின் யூடியூப் செய்திச் சேனல்கள் குறிப்பிடத்தக்க சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன, டிடி நியூஸ் மிசோரம் இதில் முன்னணியில் உள்ளது.
பிரசார் பாரதியின் வடகிழக்குச் சேனல்களில் பெரும்பாலானவற்றின் டிஜிட்டல் பார்வைகள் மற்றும் பார்வை நேரங்கள் பல இலட்சமாக உள்ளன. இதில் மணிப்பூரின் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி அலைவரிசைகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu