/* */

பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: செப்.15ம் தேதி கடைசி

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: செப்.15ம் தேதி கடைசி
X

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் பெறுவது மே 1 அன்று தொடங்கப்பட்டது. பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள் ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் ராஷ்டிரிய புரஸ்கார் போர்ட்டலில் (https://awards.gov.in ) ஆன்லைன் மூலம் பெறப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகள் / துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ குறிப்பிடும் படியான சாதனைகள் / சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருது பெற இயலாது.

பத்ம விருதுகளை மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, குடிமக்களும் சுய பரிந்துரை செய்யலாம்.

பரிந்துரைகள் / விண்ணப்பங்களில் விவரிப்பு அதிகபட்சம் 800 வார்த்தைகளில் (மேற்கோள் உட்பட), அந்தந்த துறையில் பரிந்துரைக்கப்பட்ட நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இது தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் (https://mha.gov.in) இணையதளத்திலும், பத்ம விருதுகள் போர்ட்டலிலும் (https://padmaawards.gov.in) 'விருதுகள் மற்றும் பதக்கங்கள்' என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx இணைப்புடன் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

Updated On: 12 Sep 2023 10:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை