/* */

புதிய வகை கொரோனா தொற்று குறித்து பயப்பட தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து பயப்பட தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

புதிய வகை கொரோனா தொற்று குறித்து பயப்பட தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்
X

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவகை கொரோனா குறித்து எந்தக் கவலையும் தேவையில்லை. அது ஒரு துணை மாறுபாடு தொற்று. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர்களை சோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டது. கேரளத்தின் சுகாதார அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், மரபணு பகுப்பாய்வு மூலம் அதைக் கண்டறிய முடியும். எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இருந்தாலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

ஐரோப்பிய நாடான லக்ஸெம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ‘ஜெஎன்.1’ வகை கொரோனா, பிஏ.2.86 வகையின் திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இப்புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ‘ஜெஎன்.1’ வகையானது வேகமாகப் பரவும் என்பதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமெனக் கூறப்படுவதால், கொரோனா தொடா்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த அக்டோபா் 25ம் தேதி சென்ற ஒருவருக்கு அங்கு ஜெஎன்.1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், திருச்சியிலோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலோ கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. இந்தச் சூழலில், கேரளத்தில் 79 வயது பெண்ணுக்கு ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி ஆா்டி-பிசிஆா் சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில், ஜெஎன்.1 வகை தொற்று கடந்த டிச.8-ஆம் தேதி கண்டறியப்பட்டது.

தற்போது நாட்டில் பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘ஜெஎன்.1’ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 2 Jan 2024 10:48 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  5. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  7. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  10. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?