இனி 'வாய்ஸ்' மூலம் சிலிண்டர் முன்பதிவு
பைல் படம்.
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) ஸ்மார்ட்போன் அல்லது இணைய அணுகல் இல்லாத எல்பிஜி சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளருக்கு 'வாய்ஸ்' அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி அல்ட்ராகேஷ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து குரல் மூலம் முன்பதிவு, டிஜிட்டல் கட்டண வசதியை 'UPI 123pay' மூலம் வழங்குகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 40 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் 'UPI 123pay' செயலியை அறிமுகப்படுத்தினார். இதனால் BPCL தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்கும் நாட்டின் முதல் நிறுவனம் ஆகும். பாரத் காஸ் வாடிக்கையாளர்கள் 080-4516-3554 என்ற பொதுவான எண்ணை அழைப்பதன் மூலம் இன்டர்நெட் இல்லாமல் மொபைலில் இருந்து சிலிண்டரை முன்பதிவு மற்றும் பணம் செலுத்தும் வசதியையும் பெறலாம்.
இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கூறுகையில், இந்த வசதி எங்கள் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான நம்பிக்கையை வழங்கும். இது இதுவரை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது இன்டர்நெட் இன்றி இந்த சேவை அறிமுகப்படுத்தியுள்ளதால், அடுத்த 12 மாதங்களில் ரூ.100 கோடி பரிவர்த்தனை மதிப்பை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், நகர்ப்புறங்களில் கூட, பல பயனர்கள் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான முற்றிலும் பாதுகாப்பான முறைகளைத் தேடுகின்றனர். இந்திய அரசும் உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் எல்பிஜி பயன்பாட்டை ஊக்குவித்து வருவதால், இந்த வசதி கிராமப்புறங்களில் அதிகம் சென்றடைய உதவும் என தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu