டெல்லி துணை முதலமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

டெல்லி துணை முதலமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ்?
X
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு இதுவரை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவில்லை என சிபிஐ கூறியுள்ளது

டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற குற்றம்சாட்டை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

14 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், ஆவணங்களையும், மின்னனு சாதனங்கள் மற்றும் வங்கி பரிமாற்றங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அந்த பணி முடிந்ததும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.

முறைகேடு புகாருக்கு உள்ளாகியுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
the future of ai in healthcare