ரூ.8000 கோடி மதிப்பில் 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

ரூ.8000 கோடி மதிப்பில் 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
X
ஐதராபாத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் 7 சிஆர்ஐஎப் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

ஐதராபாத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் 7 சிஆர்ஐஎப் திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங், வேமுல பிரசாந்த் ரெட்டி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கிவைத்தார்.

ரூ.8000 கோடி முதலீட்டில் 460 கி.மீ.தொலைவுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு வசதியை மேம்படுத்துவதோடு, தெலங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்திற்கு தடையற்ற போக்குவரத்திற்கும் வகைசெய்யும். சாலைப்பணிகளை துரிதமாக மேற்கொண்டது, இப்பகுதியில் வர்த்தக மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதுடன் இளைஞர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அதிநவீன மற்றும் பாதுகாப்பான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவது, ஐதராபாத் மற்றும் தெலங்கானாவில் உள்ள மக்களின் சமூக- பொருளாதார வளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!