ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
X
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்தியில் தேசிய முற்போக்கு ஜனநாயக கூட்டணி அரசு பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசின் ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்ச்சி இன்று பாராளுமன்ற மக்களவையில் துவங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை சரியாக காலை 11 மணிக்கு தாக்கல் செய்து படித்து வருகிறார்.

இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டும் இதே போல் தான் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றதேர்தல் நடைபெற இருப்பதால் மோடி அரசின் இறுதி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கான பல திட்டங்ள் இடம் பெற்று இருந்தன. கடந்த 28 மாதங்களில் சுமார் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டடிட பணிகள் இன்னும் முழுமை பெறாததால் பழைய கட்டிடத்திலேயே இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஜனாபதிபதி உரையும் இங்கு தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!