மத்திய பட்ஜெட் 2024-25: 9 துறைகளுக்கு முன்னுரிமை
பட்ஜெட் உரை நிகழ்த்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற மக்களவையில் நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் வேளாண்மை, வேலைவாய்ப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல், உள்கட்டமைப்பு வசதி, புதுமை ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் என 9 முன்னுரிமைகளை அவர் அறிவித்தார்.
நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்நிலையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார். அதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம் என தெரிவித்தார்.
மேலும் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம் உள்ளது. கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் 9 துறைகள் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
9 முன்னுரிமைகள்:
1.வேளாண்மை
2.வேலைவாய்ப்பு
3. அனைவரையு உள்ளடக்கிய வளர்ச்சி
4. உற்பத்தி மற்றும் சேவைகள்
5.நகர்ப்புற வளர்ச்சி
6. ஆற்றல்
7. உள்கட்டமைப்பு வசதி
8.புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேபாடு
9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்
பட்ஜெட் உரை:
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத் தொகைக்கான 3 திட்டங்கள்:
- உற்பத்தி துறையில் வேலை உருவாக்கத்திற்கான இத்திட்டத்தில் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவர்.
- 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.
- 1000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.
வேளாண்மை:
- இயற்கை விவசாயத்தில் ஒரு கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர்
- எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
- ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை
- வேளாண் & அதுசார்ந்த துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
இதர..
- பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கி கடனுதவி
- முத்ரா கடனுதவி திட்டத்தின் உச்சவரம்பு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- 100 உணவு தரநிலை மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- விரைவில் 12 தொழில்துறை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை
- ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 500 தொழில் பழகுநர் மையங்கள் உருவாக்கப்படும்.
- தொழில் பழகுநர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.
- குறு, சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்காக 10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- வீட்டுவசதி திட்டத்திற்கு 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்
- நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
- வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்.
- எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் விரைவில் உருவாக்கப்படும்.
- சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளம் மறுசுழற்சி
- சிறிய அளவிலான அணு சக்தி திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான சிறிய அளவிலான அணு உலைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடு.
- உள்நாட்டு அனல் மின் நிலையங்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.
- நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய சான்றிதழ் மற்றும் பிராண்டிங் உதவி வழங்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu